ADDED : மே 27, 2010 02:08 AM
சிதம்பரம் : சிதம்பரம் அருகே குமராட்சியில் வர்த்தக சங்க செயற்குழுக் கூட்டம் நடந்தது.
கவுரவத் தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார்.
ஆலோசகர் சிவக்குமார் வரவேற்றார். சங்கத் தலைவர் தமிழ்வாணன், செயலாளர் வைத்தியநாதன், பொருளாளர் பாண்டியத்துரை முன்னிலை வகித்தனர். குமராட்சி மருத்துவ மனைக்கு 108 ஆம்புலன்ஸ் வழங்கவும், தீயணைப்பு நிலையம் அமைக்கவும், வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் பாதிக்காமல் இருக்க தடையில்லா மின் சாரம் வழங்க அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன. கூட்டத்தில் வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.